Sunday, 29 September 2019

INOVASI ( JET ) S.DEVAKANTHAN TAHUN 5



ஒன்றில் இரண்டு

ஆதி சிவன் என்பது ஒருவர்தான்
அதை பிரித்துப் பார்த்தால் ஆதியும் சிவனும் இருவர்தான் !
பெற்றவர்கள் என்பது ஒருவர்தான் 
ஆனால், தாயும் தந்தையும் இருவர்தான் !

பார்வை என்பது ஒன்றுதான்
ஆனால், கண்கள் என்பது இரண்டுதான் !

சிந்தனை என்பது ஒன்றுதான்
ஆனால், மூளை என்பது இரண்டுதான் !

சுவாசம் என்பது ஒன்றுதான்
ஆனால், நுரை ஈரல் என்பது இரண்டுதான் !

ஓசை என்பது ஒன்றுதான்
ஆனால், அதை எழுப்பும் கைகள் என்பது இரண்டுதான் !

போகும்பாதை ஒன்றுதான்
ஆனால், கால்கள் என்பது இரண்டுதான் !

மனித வாழ்க்கையும் அப்படிதான்
அதில் இன்பம் துன்பமும் இரண்டுதான் !

படைப்பு
சு.தேவகாந்தன்
ஆண்டு 5

உன்னை அறி!

உன்னை அறி.....
உன்னை வென்றிடு.......
சவால்களை வென்றிடு.....
கல்வியில் வென்றிடு......
போட்டியில் வென்றிடு.....
புறம்பேசுபவர்களை வென்றிடு......

உன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி கூறு....
மாதா பிதாவுக்கும் நன்றி கூறு.....
கற்றுக் கொடுத்த ஆசிரியருக்கும் நன்றி கூறு.....



ஆக்கம்,
த.ஹிர்த்திக்
ஆண்டு 5


மகாகவி பாரதியார்

ஏழு வயதில் தாயை இழந்தவன் நீ......
பதினொன்று வயதில் கவிதை இயற்றியவன் நீ......

பல மொழிகளைக் கற்றவனே.......
பெண்களின் மீது இரக்கம் கொண்டவனே......
பெண்கள் விடுதலைக்குப் போராடியவனே........

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம் என்றவனே......
தமிழில் புலமை பெற்றவனே.....

மணையாள் செல்லம்மா புதல்வி சகுந்தலா
என்ற குடும்பம் கொண்டவனே........

உன்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா
உன்னைச் சரணடைந்தேன் என்று பாடியவனே.....

வலிமை மிக்கவனே பெருமை சேர்த்தவனே
கவிதையில் புலமை மிக்கவனே....
மகாகவி பாரதியே.........

ஆக்கம்
தே.நித்ய பிரிய நாயகி
ஆண்டு 5