Sunday, 29 September 2019

மகாகவி பாரதியார்

ஏழு வயதில் தாயை இழந்தவன் நீ......
பதினொன்று வயதில் கவிதை இயற்றியவன் நீ......

பல மொழிகளைக் கற்றவனே.......
பெண்களின் மீது இரக்கம் கொண்டவனே......
பெண்கள் விடுதலைக்குப் போராடியவனே........

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம் என்றவனே......
தமிழில் புலமை பெற்றவனே.....

மணையாள் செல்லம்மா புதல்வி சகுந்தலா
என்ற குடும்பம் கொண்டவனே........

உன்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா
உன்னைச் சரணடைந்தேன் என்று பாடியவனே.....

வலிமை மிக்கவனே பெருமை சேர்த்தவனே
கவிதையில் புலமை மிக்கவனே....
மகாகவி பாரதியே.........

ஆக்கம்
தே.நித்ய பிரிய நாயகி
ஆண்டு 5

No comments:

Post a Comment