ஆதி சிவன் என்பது ஒருவர்தான்
அதை பிரித்துப் பார்த்தால் ஆதியும் சிவனும் இருவர்தான் !
பெற்றவர்கள் என்பது ஒருவர்தான்
ஆனால், தாயும் தந்தையும் இருவர்தான் !
பார்வை என்பது ஒன்றுதான்
ஆனால், கண்கள் என்பது இரண்டுதான் !
சிந்தனை என்பது ஒன்றுதான்
ஆனால், மூளை என்பது இரண்டுதான் !
சுவாசம் என்பது ஒன்றுதான்
ஆனால், நுரை ஈரல் என்பது இரண்டுதான் !
ஓசை என்பது ஒன்றுதான்
ஆனால், அதை எழுப்பும் கைகள் என்பது இரண்டுதான் !
போகும்பாதை ஒன்றுதான்
ஆனால், கால்கள் என்பது இரண்டுதான் !
மனித வாழ்க்கையும் அப்படிதான்
அதில் இன்பம் துன்பமும் இரண்டுதான் !
படைப்பு
சு.தேவகாந்தன்
ஆண்டு 5

No comments:
Post a Comment