Wednesday, 12 September 2018

பென்சில்

ஐந்து விரல்களில் விளையாடும் 
ஒருவன் - நீ !
உன்னைப் பார்த்தால் எழுதவும் வரையவும்
மனதில் ஆசை எழும்பும் !
கல்வியில் சிறந்த நண்பனும் நீ !
தேர்விலும் வாழ்விலும் வெற்றிப் பெற
நீதான் துணை !
நீதான் நான் கண்ட ஓர் அற்புத படைப்பு !

ஆக்கம்
திவ்யா த/பெ கார்த்திகேசு

Tuesday, 11 September 2018

அன்னை

என்னைப் பத்து மாதம் வயிற்றில்
சுமந்தவள் -  நீ
நான் பார்த்த முதல்
முகமும் -  நீ
எனக்கு அன்பு, பாசம், நேசம்
அனைத்தையும் ஊட்டியவள் -  நீ
நான் கீழே விழக்கூடாது
என்ற கவனத்தில் இருந்தது உன் தாய்ப்பாசம்
என்னை ஆளாக்கி  உயர்ந்தவளாக
வளர்த்தவளும் நீயே !
என் அன்பு தெய்வமும்  நீயே !
நான் மறக்க முடியாத
ஒரு முதல் ஓவியம் - அன்னை !


திவ்யா த/பெ கார்த்திகேசு
ஆண்டு 5

REKACIPTA - DEVAKANTHAN TAHUN 4