மாலை மங்கி இலேசாக இருள் கொள்ளத் தொடங்கியது. திருமதி கீதா இரவுச் சந்தையில் காய்கறிகளை வாங்கி வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தாள். அவர் சாலையைக் கடக்க முயன்றார்.
"வண்டிகள் இல்ல! சீக்கிரமாகச் சாலையைக் கடந்தடனும்," என்று நினைத்துக் கொண்டே கடந்தார்.

அவ்வழியில் ஒரு மோட்டார் வண்டி வேகமாக வந்து அவரை இடித்து தள்ளியது. திருமதி கீதாவிடம் இருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு மோட்டார் ஓட்டி வேகமாகச் சென்றான். அவ்வழியில் திரு.சிவா வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருமதி கீதா சாலையில் விழுந்து கிடப்பதைப் பார்த்தார்.
"எனவாயிற்று ? ஓர் அம்மா சாலையில் கிடக்கிறாரே ! காய்கறிகள் சிதறிக்கிடக்கின்றனவே" என்று திரு.சிவா மனதிற்குள் கவலையுடன் கூறிக்கொண்டார்.

"ஐயோ! அம்மா!" என்று வானத்தைப் பிளக்கும் வண்ணம் திருமதி கீதா வலியால் அலறினார். உடனே, திரு.சிவா மருத்துவமனைக்குத் தொடர்புக் கொண்டார். "வயதானவர் ஒருவர் காயமுற்றுள்ளார். மருத்துவ வண்டியை உடனே அனுப்பி உதவுங்கள்" என்று கூறினார்.
சிறிது நேரம் கழித்து, மருத்துவ வண்டி அங்கு மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து வந்தது. திருமதி கீதாவிற்குத் திரு.சிவா உதவிக்கரம் நீட்ட ஓடோடி வந்ததற்குத் திருமதி கீதா நன்றி கூறினார். "பரவாயில்லை அம்மா", என்று தன் அம்மாவிடம் கூறுவது போல் பாசத்தைக் காட்டினார்.
சில நாட்கள் கழித்து திருமதி கீதா குணமாகி வீடு திரும்பினார். அன்று இரவு சாப்பிட்டுக் கொண்டு............
"மகனே...... எனக்குத் தெரியும் நீதான் அன்று இரவு என் பணப்பையைத் திருடினாய். அதில் இருக்கும் பணத்தை நீயே வச்சிக்கோ, அதில் உள்ள உன் அப்பாவுடையப் படத்தை மட்டும் கொடு. அது போதும்", என்று தேம்பி அழுதார்.
"அம்மா.....அம்மா...... என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் இதுபோல் நான் செய்ய மாட்டேன்", என்று கண்களிலிருந்து கண்ணீர் மழைபோல் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டே மகன் கூறினான்.
அவனின் அம்மாவும் அவனை மன்னித்து விட்டார். இருவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். இருவரின் முகத்தில் புன்னகை பூத்தது.
ஆக்கம்\
மாதுரி த/பெ விக்னேஸ்
ஆண்டு 6
No comments:
Post a Comment