Saturday, 3 March 2018

நேர்மை

               தேவி ஸ்கார்போரோ தோட்டத்  தமிழ்ப்பள்ளியில் ஐந்தாம் ஆண்டு பயில்கிறாள். அவள் எறும்பு போல சுறுசுறுப்பாக இருப்பாள். அன்று மூன்றாவது நாள். டிரிங்...டிரிங் என்று பள்ளி மணி அடித்தது. மாணவர்கள் வீட்டிற்குப் புறப்படும் நேரத்தை உணர்த்தியது.
   உச்சி வெயில் தேவியின் தலையைச் சுட்டெரித்தது. அவளின் கால்கள் வீட்டை நோக்கி விரைந்தது. அவ்வழியில் ஓர் அழகான கைப்பை தேவியின் கண்களில் தென்பட்டது. அவள் சற்றும் தாமத்திக்காமல் அக்கைப்பையைத் திறந்து பார்த்தாள். கைப்பையில் நிறைய நோட்டுகள் இருந்தன. 
      உடனே, அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவ்வேளையில் வகுப்பாசிரியர் அருகில் நடந்து போவதைக் கண்டாள். "டீச்சர்! டீச்சர்!" என்று கூப்பிட்டாள். ஆசிரியரிடம் கண்டெடுத்த கைப்பையைக் காட்டினாள்.
              "இக்கைப்பை என்னுடையதுதான்" என்று ஆசிரியர் பதற்றத்துடன் கூறினார். உடனே, அவள் ஆசிரியரிடம் கைப்பையைப் பத்திரமாக ஒப்படைத்தாள். அதைக் கண்ட ஆசிரியரின் மனம் மகிழ்ச்சியடைந்தது. "தேவி, உன் நேர்மையைக் கண்டு பாராட்டுகிறேன்," என ஆசிரியர் அவளைத் தட்டிக் கொடுத்தார்.
                தேவியும் ஆசிரியருக்கு நன்றி கூறி விடைபெற்றாள். ஆசிரியரும் வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.

ஆக்கம்
திவ்யா த/பெ கார்த்திகேசு
ஆண்டு 5
                

No comments:

Post a Comment