Sunday, 29 July 2018

முயற்சி

உருண்டோடி மறைந்த 
வருடங்கள்........
நம் வாழ்க்கையில் பல
அர்த்தங்களை உணர்த்துகின்றன..........

எனவே........
விதைகின்ற முயற்சியை
நன்முறையில் செயல்படுத்தி
வாழ்வில் வெற்றி கொடியை
நாட்டுவோம்..!!!
முயற்சி செய்ய வாரீர்......

ஆக்கம்
கிஷோர் ராஜ்  த/பெ செல்வகுமார்
ஆண்டு 5

Saturday, 21 July 2018

நான் போற்றும் ஆசிரியர்

அன்பையும் பண்பையும் வளர்ப்பவரே
ஆசையுடன் பார்ப்பவரே
இசையும் கதையும் சொல்பவரே
ஈசனை வணங்க உரைப்பவரே
உலக அறிவைத் தருபவரே
ஒற்றுமையுடன்  வாழ சொல்பவரே
எண் எழுத்தையும் அறிந்திடவே
ஏற்ற உதவிகள் செய்பவரே
அகிலம் போற்ற வைப்பவரே
அன்பான எனது ஆசிரியரே !

ஆக்கம்
இரா.சஞ்ஜே
ஆண்டு 5

Tuesday, 17 July 2018

அப்பா

என் அன்புத் தந்தை
நான் உண்ணும் போது உங்கள் பாசம்
நான் தூங்கும்போது உங்கள் தாலாட்டு
எனக்கு நீங்கள் ஆசான் !

எனக்குத் தோல் கொடுப்பவர் நீங்கள்
எனக்கு வெற்றி வகுத்தது நீங்கள்
என் தவமான அன்புத் தந்தையே
செய்த உதவிக்கு நன்றி ! நன்றி ! நன்றி !

ஆக்கம்
ஹிர்த்திக்
ஆண்டு 4

Saturday, 7 July 2018

சின்ன சின்ன மலர்களே !

சின்ன சின்ன மலர்களே
நீங்கள் பூத்துக் குலுங்கியதைக் காணவே !
என் மனம் ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கிறது !
என்னை அறியாமல் என் மனம்
அமைதியாகவும் சாந்தமாகவும் உள்ளது !

உன் மேல் தேனிகள்
அவை உன் அழகை ஆராதனை செய்கின்றன !
உன் தேன்களை உண்டு மனம் மகிழ்கின்றன !
இயற்கை அன்னையின் மடியில்
தவழும் உன்னைப் போற்றி பாட
வார்த்தைகளே இல்லை !

ஆக்கம்
பி.டிவேஷா
ஆண்டு  5